12.01.18-Friday-FATVTamil-Live

12.01.18 FRIDAY FRIDAY

“இணைக்கும் ஆண்டு” 2018

January 12 – Birthday of Swami Vivekananda : சுவாமி விவேகானந்தர் 153 வதுபிறந்ததினம்

Swaami Vivekaananthar

மக்கள் சேவைக்காக களத்தில் இறங்கி வேலைசெய்யும் துறவிப்படையை உருவாக்கியவர் .வசிஸ்டர் வியாசர் வழிவந்த ஆசார்யர். உலகிற்கு புதுவேதாந்தத்தை உரைத்தவர். மக்களின் பசியைக்கண்டு கண்ணீர் உகுத்தவர் .அவர்களின் பசியை நோயை நீக்குவதே மதம் என்று போதித்தார்.

அவர் வேறு யாருமல்ல. அவர்தான் ஆன்மீகச்சிங்கம் சுவாமிவிவேகானந்தர். சுவாமி விவேகானந்தர் என்ற நாமம் இன்று மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகிவிட்டது.
ஆம். உலகளாவியரீதியில் ஜீவசேவையாற்றிவரும் ஸ்ரீP ராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் இப் பூவுலகில் அவதரித்து 153 வருடங்களாகின்றன.  [மிகுதி கீழே  ]

\\//

First Audio London Tamil Radio FATV முன்னெடுப்பில், 12 வது ஆண்டில்,

பொன்மாலைப்பொழுது அரங்குகளில்,“உலகத்தமிழ்மொழிநாள்” 2018 :

உலக தமிழ் மொழி நாள் -வாசகம்-
“தாய்மொழியை, வாழ்வியலாக்குவோம்”

இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட அரங்குகள்..!!

06.01.18 Sat PMP 182 Coventry /  13.01.18 Sat PMP 183 Gottingan /  20.01.18 Sat Netherland /  21.01.18 Sun PMP 184 Swiss /  28.01.18 Sun PMP 185 Geilenkirchen /  28.01.18 Sun PMP 186 London ]Harrow on the Hill]  /  28.01.18 Sat Swiss Madis Will .. …

2018 SWISS Masiswillஉலகத்தமிழ் மொழி நாள்-2018

[[    ]]

11.01.18 Sunrise Tamil News : Live

Nagula Sivanathan :

[[   ]]

Swiss ராகவன் செல்வநாயகம் [50] பிறந்தநாள்:

RAAKAVAN PHOTO

அஜிதா, ரோஜித், ராம்ஜித், சிவதர்சினி வாழ்த்திச்சிறப்பிக்க,
நாமும் இணைத்து வாழ்த்துவோம்…! இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்… ராகவன் அவர்களே..

[[    ]]

“பண்ணிசை”

Arjitha :

“santhosh

[[ ]]
“எம்மவர் பாடல்”
[[ ]]
“சிந்தனை”

“நாடகம்”  மீண்டும் சுவைக்க…  உருவாக்கம்.. Jeyam Thangarajah 

[[ ]]
“வாசிப்பு அரும்பு”

Narthana : [6] : [126]

Santhosh : [407]

Vishnaya : [890]

[[ ]]
“சந்தி சிந்தி”

பார்த்ததில் ரசித்தது…22 [12/1/18 : By Vajeetha Mohamad..

[[ ]]

செல்வி-யின், “கேள்விக்கணைகள்” By செல்வி நித்தியானந்தன்.. : நேரலை..

last week 05.01.18

[[ ]]

“சொற்தேடல்” By : ஜெயமலர் & வசந்தா.. இணைப்பில்.. வாணி…
[[ ]]

 

[[[[[[    11.01.18 Thursday பாமுக தொகுப்புகள்…    ]]]]]]

“கவிதை நேரம்”

[[ ]]

“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் 

[[    ]]

“ஊரோடு விளையாடு” By வஜீதா மொகமட் 

[[ ]]

++[[       ]]++

சுவாமி விவேகானந்தர் 153 வதுபிறந்ததினம்

அரசியலமைப்புச் சட்டத்தில் சுவாமி விவேகானந்தர்!

சுவாமி என்ன அரசியல் வாதியா என்ன நீங்கள் கேட்கலாம். சுவாமி விவேகானந்தரின் காலத்திற்கு 50வருடங்களின் பின்னரே இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் சுவாமி தான் வாழ்ந்த காலத்திலே இந்தியாவிற்கு என்னென்ன தேவை எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எவற்றையெல்லாம் பின்பற்றவேண்டும் என்பதையெல்லாம் கூறிவிட்டார்.

அதனால்தான் இன்றைய இந்தியாவின் நீதிமன்றங்களில் எல்லாம் வழக்குத்தீர்ப்புகளின்போது திருக்குறள் கீதை சுட்க்காட்டப்படுவதைப்போன்று சுவாமியின் கருத்துக்கள் நீதிபதிகளால் மேற்கோள்கள் காட்டபட்டு வழிகாட்டிகளாக கையாளப்படுகின்றன.

இன்றைய நாளில் சுவாமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பொன்மொழிகள் பற்றி இங்கு பார்ப்போம்.

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Pசநளனைநnஉல ஊழடடநபந) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

அங்கே மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும் உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார். மேலும் அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

 

இராமகிருஷ்ணருடன்

இறைஉண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இராமகிருஷ்ணரின் போதனைகள் உருவ வழிபாடு அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல் இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால் விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

 

துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும் அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

 

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம் அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்தகருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள் அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும் இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது.

பின்னர் கல்கத்தாவில் இராமகிருஸ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

இலங்கையில் மூன்று தடைவை விஜயம்!

சுவாமிகள் எமது இலங்கைத்திருநாட்டிற்கு மூன்று தடவைகள் விஜயம்செய்துள்ளார். 1893ஆம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக இலங்கை வந்தார். பின்னர் 1893ஆம்ஆண்டு செப்ரம்பர் 11ஆம்நாள் வந்தார்.
இறுதியாக அமெரிக்காவிலிருந்து தாயகம் செல்லும் வழியில் 1897 ஜனவரி மாதம் 15ஆம் நாள் வருகைவந்தார்.

இலங்கை சட்டசபை உறுப்பினர் பி.குமாரசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் வரவேற்பு விழா கொழும்பில் இடம்பெற்றது.

அங்கு சுவாமி பேசுகையில் தனக்களிக்கப்பட்ட இப்பெருவரவேற்பு ஒரு சிறந்த அரசியல்வாதிக்கோ சிறந்த போர்வீரனுக்கோ பெரிய செல்வந்தனுக்கோ தரப்படவில்லை. மாறாக பிச்சையேற்று வாழும் ஓரு துறவிக்கு அளிக்கப்பட்டுள்ளது.தனக்களிக்கப்பட்ட வரவேற்பு ஒரு கொள்கைக்கு கிடைத்த வரவேற்பே தவிர மனிமனிதனுக்கு அளிக்கப்பட்டது அல்ல. நமது நாடு வாழவேண்டுமானால் மதமே தேசிய வாழ்க்கையின் முதுகெலும்பாக அமையவேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் சில பொன்மொழிகள்
 நீ எதை நினைக்கிறாயோ நீ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
 நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
 கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும்இ ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்இ அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
 உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால் நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள் குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
 செயல் நன்று சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்
 வாழ்வும் சாவும் நன்மையும் தீமையும் அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம் ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்
 உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
 சுயநலமின்மை சுயநலம் என்பவற்றைத் தவிரஇ கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
 எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
 நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
 இளைஞர்களே தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
 இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
 வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.

 என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உலகில் வாழு ஆனால் அதில் ஒட்டிக்கொள்ளாதே. தூமரையிலைத்தண்ணீர் போன்று வாழு என்கிறார்.
அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி… எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய் கபீர்தாசு ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம் இவற்றிலும் உண்டு.

அனைத்தும் ஆகி அன்பாகி
அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்

-விவேகானந்தர்

[ நன்றி ]  – Tamil CNN

+